அமைச்சர் மங்கள சமரவீர மீது கடுமையான குற்றச்சாட்டு!

Report Print Kamel Kamel in அரசியல்

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாட்டையும், பாதுகாப்புப் படையினரை காட்டிக் கொடுக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் பதவியொன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாட்டையும் படைவீரர்களையும் தொடர்ச்சியா காட்டிக் கொடுத்து வருகின்றார்.

மோசடியாக வரவு செலவுத் திட்டம் ஒன்றை மங்கள சமர்ப்பித்துள்ளார். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு புறத்தில் பொய்யான தகவல்கள் வழங்கி வருகின்றார். மறு புறத்தில் பொய்யுரைத்து வருகின்றார்.

வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களில் பல்வேறு விடயங்கள் பொய்யானவை. வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் மங்கள நாட்டை காட்டிக் கொடுத்தார் என எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.