இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மட்டக்களப்பிற்கு விஜயம்

Report Print Kumar in அரசியல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், புதிய உறுப்பினர்களை இணைத்தல் குறிப்பாக இளைஞர்களை உள்வாங்கிக் கொள்ளல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.