பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடு திருப்புகின்றார் கோத்தபாய ராஜபக்ச!

Report Print Murali Murali in அரசியல்

தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பவுள்ளார்.

இன்று காலை 8.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக கோத்தபாய ராஜபக்சவின் தரப்பினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியிலேயே இன்று நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச, அது தொடர்பில் விஷேட விளக்கத்தினை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது, அதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பிலும் அவர் இதன்போது வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.