டுபாய் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் நாடு கடத்தப்படுகின்றார் மதுஷ்?

Report Print Kamel Kamel in அரசியல்

டுபாய் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதுஷை அழைத்து வரும் விமானத்தில் நான்கு டுபாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு நிமித்தம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுஷுடன் பிரபல பாடகர் அமல் பெரேராவும் நாடு கடத்தப்பட உள்ளதாகவும், டுபாய் பொலிஸார் இதுவரை பதிவு செய்த வாக்கு மூலங்களின் பிரதிகளும் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை அரசாங்கத்தினால் டுபாய் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மதுஷ் நாடு கடத்தப்பட உள்ளார்.

நாடு கடத்தப்படும் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட தரப்புக்களினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.