கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்?

Report Print Sujitha Sri in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கானது இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் பின்புலமும் காணப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவினதும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்சவினதும் பாதுகாப்பானது உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.