தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
அவர் சற்று முன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியிலேயே இன்று நாடு திரும்பியுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.