விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகம்! அம்பலப்படுத்திய கோத்தபாய

Report Print Sujitha Sri in அரசியல்

அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும், இலங்கையிலுள்ள சிலரும் செயற்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா - கலிபோர்னிய கொன்செல் அலுவலகமும் இதற்கு ஒத்துழைத்திருப்பது கவலைக்குரிய செயற்பாடாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள மக்களும் அதேபோல நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களும், அமெரிக்காவிலுள்ள இலங்கை பிரஜைகளும் பாரியளவான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.

ஏனென்றால் இவை அரசியல் ரீதியான நோக்கத்திற்காக செய்யப்பட்டவை. இதற்கு முன்னர் குறைந்தது 10 தடவைகள் அமெரிக்காவிற்கு சென்று வந்துள்ளேன்.

அப்போது அந்த தரப்பினர் எந்தவொரு சிவில் வழக்கையும், நட்டஈட்டையும் கோரியிருக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலை சம்பந்தப்படுத்தி செய்யப்பட்டதாகும்.

இதற்கு பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர்ந்த சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும் அதேபோல இலங்கையிலுள்ள சில தரப்பினரும் அதேவேளை சொல்வதற்கும் கவலையடைகிறேன்.

கலிபோர்னியாவிலுள்ள கொன்சல் அலுவலகமும் இதற்கு ஒத்துழைத்தது. இப்படியான கீழ்த்தர அரசியலை செய்வது மிகவும் அநீதியாகும். இந்த காலகட்டத்திற்குள் நான் பாதுகாப்பு செயலாளரான மேற்கொண்ட பணிகளையும், நாட்டையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

தனக்கெதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் அவற்றை இரத்து செய்வதற்கான முயற்சிகளை தனது சட்டத்தரணிகள் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.