தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்து உச்சநிலையில் போராடிய கருணா மற்றும் கேபி உள்ளிட்டவர்கள் வெளியில் இருக்கின்றார்கள், ஆனால் பற்றரி வாங்கிக் கொடுத்தவர்களும் வீடு வாடகைக்குக் கொடுத்தவர்களும் இன்னமும் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ள புலம் பெயர் தமிழரான ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.
விசேட செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உங்களால் நல்லிணக்க முயற்சியை மேற்கொள்ள முடியாதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
நான் கடந்த செம்டெம்பரில் இலங்கை வந்திருந்தேன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், நல்லாட்சி நடக்கிறதென்ற நம்பிக்கையில் அங்கு வந்தேன்.
அங்கு வந்து பார்த்தபோதுதான் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு கஸ்ட்டப்படுகின்றானர்கள் கஎன்பதை அவதானிக்க முடிந்தது.
காணாமல் போனோர் அலுவலகம் இருக்கின்றது, அது எங்களுக்கு அவசியமில்லை. எப்படிக் காணாமல் போனார்கள் என்பதே எமக்குத் தேவை.
உச்சநிலையில் போராடிய கருணா, கேபி போன்றோர் வெளியில் இருக்கின்றார்கள்.
ஆனால் வீடு வாடகைக்குக் கொடுத்தவர்களும் பற்றரி வாங்கிக் கொடுத்தவர்களும் இன்னமும் சிறையில் இருக்கின்றார்கள்.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றங்கள் ஏற்படாதவரை நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை.
எத்தனைக் கலவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன, எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை. காலாகாலமாக இதுதான் நடக்கின்றது. அதனால்தான் சர்வதேச நீதியை நாடக் கடப்பட்டிருக்கின்றோம்.
பூகோள அரசியல் மாற்றமடைந்து வருகின்றது. இதனால் பாதிக்கப்படபோவது ஆட்சியாளர்கள்தான் ஆகையால் நிலைமையை உணர்ந்து காய்களை நகர்த்துவதுனூடாகவே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து என குறிப்பிட்டுள்ளார்.