ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய வேண்டும்! ஆனால்...

Report Print Ajith Ajith in அரசியல்

தமது பதவிக் காலம் முடிவடையும் காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய முற்படுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்பை வெளியிடவில்லை என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது.

எனினும் புதிய பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படும் வரை ஜனாதிபதி, தமது மனுவை தாக்கல் செய்ய காத்திருப்பதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கிறது.

புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்படும் வரை காத்திருந்து விளக்கத்தை கோருவதன் ஊடாக தமக்கு வாய்ப்பான ஒருவர் வரும் வரை ஜனாதிபதி காத்திருப்பது போன்று உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.