ஊர்காவற்றுறை ஏ.எஸ்.பிக்கு எதிராக சரவணபவன் எம்.பி. முறைப்பாடு!

Report Print Rakesh in அரசியல்

ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

மண்டைதீவில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்காக நிலம் அளவிடும் முயற்சி நேற்று நடைபெற்றது.

அந்தப் பகுதியின் பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சம்பவ இடத்தில் நின்ற ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் சம்பவம் தொடர்பில் விசாரித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனது வாகனத்தில் இருந்தவாறே பதில் வழங்கியுள்ளார் ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்.

அவரைப் பேச்சு நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அழைத்தபோது நீதிமன்றுக்குச் செல்ல வேண்டியுள்ளது என்று தெரிவித்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.

இவை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குறைந்திருந்த மாடு கடத்தல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்து வருகின்றமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரால் பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.