ஜனாதிபதி தேர்தல்! வெற்றிபெற ஐக்கிய தேசியக் கட்சி வகுத்துள்ள வியூகம்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான வியூகம் தமக்கு தெரியும் என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அநீதியான வெற்றிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயமாக வெற்றியடையும்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான வியூகம் தமக்கு நன்கு தெரியும். இதனிடையே, இனம், மொழி, கடந்த எமது அரசாங்கம் சேவை செய்து வருகின்றது.

எனினும், எமது செயற்பாட்டை சிலர் புரிந்துகொள்ளவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.