கோதபாய ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் எதுவும் கிடைக்காது!

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பாலிந்தநுவர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாக அமையும்.

கிராமிய சபையொன்றிலேனும் உறுப்பினராக பதவி வகித்த ஒருவர் அரசியலில் பிரவேசித்தல் பிரச்சினைகளை உருவாக்கும்.

அமெரிக்காவில் கோதபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள விவகாரத்தில் அந்நாட்டுக்கான இலங்கை கொன்சோல் காரியாலயத்திற்கு தொடர்பு கிடையாது.

கோதபாய ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Latest Offers