இலங்கை விஜயத்தை முடித்து கொண்டது சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு

Report Print Ajith Ajith in அரசியல்

சித்திரவதைகளை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் உப குழு தமது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது.

கடந்த இரண்டாம் திகதி இலங்கை வந்த இந்த குழு நேற்று தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளது.

இதன்பின் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில், தமது விஜயத்தின்போது முழுமையான ஒத்துழைப்பு கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பு முகாம்களுக்கு செல்ல முடிந்ததுடன், தனிப்பட்ட நேர்காணல்களையும் மேற்கொள்ள கூடியதாக இருந்தது என தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் சித்திரவதைகளுக்கு எதிரான பொறிமுறை ஒன்று செயற்படுத்தப்படும் என்று தாம் நம்புவதாக குழுவின் உறுப்பினராக விக்டர் ஸாக்கிரியா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமது பணிகள், இரகசியமாகவும் பக்கசார்பற்றதாகவும் தெரிவின்மை அடிப்படையிலும் பொதுமை என்ற தோற்றத்துடனும் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த குழு, தமது பார்வையையும் பரிந்துரைகளையும் இலங்கை அரசாங்கத்துக்கு இரகசியமான முறையில் வெளிப்படுத்தவுள்ளது.

இதற்கிடையில் இலங்கைக்கு வந்த குழுவில், விக்டர் ஸக்கிரியா (தலைவர் - மோல்மோவா குடியரசு), சட்யாபூசன் குப்ட் டோமா (மொரீசியஸ்), பெட்ரெர்ஸ் மிச்செலிடெஸ் (சைப்பிரஸ்), ஜூன் லோப்பெஸ் (பிலிப்பைன்ஸ்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.