கோத்தபாய மீது அமெரிக்க நீதிமன்றில் வழக்கு! மறுக்கும் இலங்கை அரச தரப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் பின்புலத்தில் கலிபோர்னியா கொன்சியூலர் அலுவலகம் இருந்துள்ளதாக கோத்தபாயவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது.

கோத்தபாயவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அவரது குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற இரண்டு குற்றச்செயல்களுக்கு தான் பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தி இங்குள்ள சிலரும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தனக்கு எதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்காவில் தாக்கல் செய்துள்ளதாகவும், இதற்கு கலிபோர்னியாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் உடந்தையாக இருக்கிறது என்றும் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளா்.

அங்குள்ள கொன்சியூலர் தன்னுடன் தொடர்புகொண்டு இந்த வழக்குகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனக் கூறியதாக அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

கலிபோர்னியாவுக்கான கொன்சியூலராக நியமிக்கப்பட்டுள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் தொழிற்சங்க பணிப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டிருந்த லக்ஷ்மன் பிரேமசந்திரவே ஆகும்.

அதனைப் பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுப்பதுடன் இந்த விவகாரத்தின் பின்புலத்தில் கலிபோர்னியாவுக்கான கொன்சியூலர் அலுவலகம் இல்லை என்பதை தான் உறுதியாக கூறுவதாகவும் அமைச்சர் ராஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers