இலங்கையில் முடியாத ஒன்றே அமெரிக்காவில் பதியப்பட்டுள்ளது! கோத்தபாய மீதான வழக்கு தொடர்பில் நாமல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுப்பதன் மூலம் இலங்கை நாட்டின் அரசியல் அலையை மட்டுப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் பொய்யான வழக்குகளைப் போட்டு எதுவும் செய்து கொள்ள முடியாமல் போயுள்ள நிலையில் சர்வதேசத்தை நாடியுள்ளனர். சர்வதேச சட்டம் எமது நாட்டுக்குச் சரிவராது.

இலங்கையில் பாரிய குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு வழக்குக் கூட பதிவு செய்யப்படாத நிலையில் தான் வெளிநாட்டில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் அரசியல் தீர்மானம் எடுப்பவர்கள் இந்நாட்டின் பொது மக்கள். பொதுமக்கள் அரசியல் ரீதியில் சரியான தீர்மானத்தை எடுக்குமாறு பொது மக்களிடம் தாம் கேட்டுக் கொள்வதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.