கிளிநொச்சி விவேகானந்தநகர் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

Report Print Kaviyan in அரசியல்

கிளிநொச்சி மாவட்டத்தின் விவேகானந்தநகரில் புனரமைப்புச் செய்யப்படாதுள்ள வீதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலும் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் கிராமிய வீதிகள் பல புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் மேற்படி திட்டத்தினூடாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் பல வீதிகள் ஒழுங்கு முறைப்படி புனரமைக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் போக்குவரத்துச் செய்யும் பல வீதிகள் பல வருடங்களாகப் புனரமைப்பின்றிக் காணப்படுகின்றன.

இவ்வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கான பல முயற்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் எடுக்கப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் தற்போது துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தினூடாக பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைப்பின்றிக் காணப்படும் விவேகானந்தநகர் கிராமத்தின் வீதிகளை, நேற்றைய தினம் மாலை நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பார்வையிட்டதுடன் அவ்வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடும் போது தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், விவேகானந்தநகர் கிராம மட்டப் பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் நேரடியாகச் சென்று அப்பகுதி வீதிகளைப் பார்வையிட்டு புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.