மகிந்த - கோத்தபாய ராஜபக்ச இருவரும் ஜனாதிபதியாக வரமுடியாது!

Report Print Murali Murali in அரசியல்
மகிந்த - கோத்தபாய ராஜபக்ச இருவரும் ஜனாதிபதியாக வரமுடியாது!

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது.

எனினும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் களமிறங்குவாரென நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து பாரிய கூட்டமைப்பாக எதிர்வரும் தேர்தலில் களமிறங்கும். நாம் சட்டத்துக்கு கட்டுப்படும் பிரஜைகள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீத்தா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை வைத்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார். இதே சட்டம் தான் கோத்தபாய ராஜபக்சவுக்கும் உள்ளது.

சட்டம் அனைவருக்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவை கட்டுப்படுத்த ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உச்சக ட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் நாட்டுத் தலைவரை தீர்மானிக்கும் போது நாட்டு மக்கள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தித்து செயற்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Latest Offers