இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தமிழ் மக்கள் வாழ தயாரில்லை

Report Print Rakesh in அரசியல்

வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில்ஆரம்பமான போது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதையும் மீறி அளவீட்டுப் பணிகள்இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம். தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் வார இதழ் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழ தயாரில்லை. தமிழர்தாயகம் சிங்கள மயமாக்கப்பட நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து இராணுவத்தினர் உடன் வெளியேற வேண்டும். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

நாம் கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உட்பட்டாலும் அதிலிருந்து மீண்டெழுந்துள்ளோம். எமது உரிமைகளுக்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

உரிமைகள் கிட்டும் வரை எத்தனை இடர்கள் வரினும் எமது போராட்டம் தொடரும் என்றார்.

Latest Offers