ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை..! மஹிந்தவின் தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

தாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் கூறுவதை போன்று தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் அவர் ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து செயற்பட்டமை காரணமாகவே தாம், எதிர்க்கட்சியின் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவகையில் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் தாம் மூன்றாவது அரசியல் சக்தியாக உருவானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers