விரைவில் அதிரடி அரசியல் பல்டிகள்!

Report Print Rakesh in அரசியல்

தேசிய மட்டத்திலான தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாகத் தென்படுகின்றன.

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமிக்கக்கூடும். அதேபோல் ஐ.தே.க. மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மஹிந்த அணியுடன் கைகோர்க்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்களின்போது இதற்கான அடித்தளத்தை அரசியல் பிரமுகர்கள் இடவுள்ளனர்.

அதேபோல் மலையக அரசியலிலும் ‘பல்டி’கள் அரங்கேறவுள்ளன. இதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன.