கோத்தபாய மீதான வழக்கின் பின்னணியில் புலிகள்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் பின்னணியில் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளே இருக்கின்றார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்ச மீதான வழக்கின் பின்னணியில் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளே இருக்கின்றனர்.

அத்தோடு, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் யஸ்மின் சூக்கா போன்றவர்களே இருக்கின்றனர். இதற்காக பாரியளவு பணமும் செலவு செய்யப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச மீது 50 வழக்குகள் தாக்கல் செய்தாலும் பிரச்சினை கிடையாது.

எந்த வழக்கிற்கும் அவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தபடவில்லை. வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் மாத்திரம் வேட்பாளராவதை தடுக்க முடியாது.

அவ்வாறாயின் வேட்பாளராக தெரிவு செய்யும் அனைவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்து அவரை தடுக்க முடியுமே.

பிரபலமான ஒருவர் வேட்பாளராக வரும்போது அவரை தடுப்பதற்கு ஏதேனும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்வர்.

வழக்கு போடுவது முக்கியமல்ல, அந்த வழக்கு சாதகமாக அமைய வேண்டும். தற்போது எந்த ஒரு நீதிமன்றத்திலும் கோத்தபாய ராஜபக்ச குற்றவாளியாக அடையாளப்படுத்தப்படவில்லை.

ஆகவே, 100 வழக்குகள் தாக்கல் செய்தாலும் அதனால் அவர் வேட்பாளராவதற்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers