மைத்திரிக்கு மீண்டும் பாடம் புகட்ட ரணில் மந்திர ஆலோசனை?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர்களுடனும், தன் நெருங்கி நண்பர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்களையும் இஇணைத்து புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர அவசரமாக தனக்கு நெருக்கமானவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது. கூட்டாட்சியின் போது பிரதமர் ரணிலுக்கும், ஜனாதிபதி மைத்திரிக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஆட்சிக் கவிழ்ப்பினை ஜனாதிபதி செய்திருந்தார்.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அது பிசுபிசுத்துப் போனது. இந்நிலையில் அவர் மீண்டும் ஏதேனும் முடிவுகளை எடுத்தால், மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியல் பாடம் ஒன்றை கற்கத் தயாராகட்டுமென இந்த ஆலோசனைகளில் ரணில் தெரிவித்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய ஆட்சிக்காலம் முடிவதற்குள் பிரதமராக இருக்கும் ரணிலை எப்படியாவது ஆட்சியிலிருந்து அகற்றி தன்னிலை சார்பான ஒருவரை பிரதரமாக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.