ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க இதுவே காரணம்! சுமந்திரன் விளக்கம்

Report Print Murali Murali in அரசியல்

அதிகாரப் பகிர்வு குறித்த மாற்று வரைபொன்றை தயாரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அதிகாரப் பகிர்வு குறித்த மாற்று வரைபொன்றை தயாரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் பின்னர் அரசாங்கம் மீள அமைக்கப்படுவதற்கு சில பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

அதனடிப்டையிலேயே ஐக்கியத் தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க தாம் ஆதரவளித்திருந்தோம். அந்த இணக்கம் அல்லது உடன்பாடு தொடர்ச்சியாக இருக்கிறது.

அதாவது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமாக இருக்காவிட்டால், அதற்கு மாறாக மகிந்த ராஜபக்‌ச ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கே ஆரவளிப்பதற்கு முக்கிய காரணம் என்றும் கூறினார்.

அதேநேரம் நாட்டில் அரசியல் சூழ்ச்சி இடம்பெறுவதற்கு முன்பாக, நிதியமைச்சுடன் சில விடயங்களைப் பேசி அதில் இணக்கம் காணப்பட்டிருந்தது. அந்தவகையில் முன்னர் இணங்கிய விடயங்கள் இதில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், அரசாங்கம் உடனடியாக பதவியிழக்கும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அரசாங்கம் பதவியிழந்தால் மகிந்த ராஜபக்சவே பதவியில் வருவார்.

அதற்கு இடமளிக்க முடியாது. இது போன்ற காரணங்களினாலேயே வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

Latest Offers