விரைவில் அரசியல் மாற்றம்? விசேட அறிவிப்பை வெளியிட தயாராகும் மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

சித்திரை புது வருடப்பிறப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியல் ரீதியில் தீர்மானம் ஒன்றை எடுத்து சித்திரை புதுவருட பிறப்பின் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதமாகும் போது ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும்.

ஏனெனில், மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்னர் ஆறு பேர் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். எனினும், அவர்கள் எவரும் செய்யாத விடயங்களை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.

யாரும் கை நீட்டி மைத்திரிபால சிறிசேனவை ஊழல்வாதி என்று கூறமுடியாது. ஆகையினால், அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers