எமது இனத்தை அழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை! சிறீதரன் எம்.பி

Report Print Yathu in அரசியல்

எமது பாரம்பரியங்களை இளைஞர்களே பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று பளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது இனத்தின் இருப்பு என்பது நிலம், கலை கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் போன்ற தனித்துவங்களிலே தங்கியுள்ளது. எனவே எமது இனத்தை அழிக்க வேண்டுமானால் எமது தனித்துவமான அடையாளங்களை அழிக்க வேண்டும்.

இது தொடர்ச்சியாக சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே இவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது என வலியுறுத்தியுள்ளார்.

இதில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உபதவிசாளர் கஜன், கிளிநொச்சி மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.