மஹிந்தவின் வீட்டிற்குள் திடீரென குவித்த மக்களால் பரபரப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

மஹிந்தவின் கோட்டையான தங்காலை பகுதியில் திடீரென மக்கள் ஒன்று கூடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்காலை கால்ட்ன் வீட்டிற்கு அருகில் பெருமளவு மக்கள் கூடியமையினால் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்து கூற வந்த மக்கள் கூட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவரின் வீட்டு பகுதியில் பாரிய மக்கள் கூட்டம் வருகைத்தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வருகை தந்த மக்களுக்கு மஹிந்தவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை காண வந்த அனைவருக்கும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers