கோத்தாவிற்கு எதிரான தமிழரின் வழக்கு! பின்னணியில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

என்னைக் கைது செய்வதற்கு முன்னர் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் 50 இலட்சம் ரூபா வரை பணம் கோரினர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் என்ற புலம்பெயர் தமிழர் தெரிவித்துள்ளார்.

ஐபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் கோத்தபாய ராஜபக்ச மீது வழக்குத் தாக்கல் செய்தும் என்னைச் சுற்றியிருந்த அனைவரும் இது நடக்காத காரியம் என தூற்றினர்.

நான் கைது செய்யப்பட்டிருந்த சமயம் வெலிக்கடை மகசின் சிறைச்சாலைகளில் உள்ள பெருமளவான தமிழ் கைதிகள் இறந்து போயினர் என குறிப்பிட்டுள்ளார்.