ரணிலை விடுத்து வேறு யார் பிரதமராவார்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு தலைவர் தான் இருக்கின்றார். அவர் ரணில் விக்ரமசிங்க மட்டும்தான் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐதேகவிலிருந்து வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் தற்பொழுதுள்ள தகுதியான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு தலைவர் தான் இருக்கின்றார். அவர் ரணில் விக்ரமசிங்க மட்டும்தான். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

இதுபோன்ற பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுகின்றனர். இருப்பினும், கட்சியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

தாய் தந்தையர்களின் பெயரைக் காட்டி எமது கட்சியை முன்னுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றார்.