தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார் மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மிகப்பெரும் தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே எமது நோக்கம் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்கல்லை, கால்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச,

இந்த அரசாங்கம் புதுவருடம் ஒன்று வரும் போது தெரிந்து தெரிந்து பொருட்களுக்கான வரியை அதிகரித்தது. எப்போது வரியை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் கருத்தில் கொள்வதில்லை.

எமது அரசாங்க காலத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் நத்தார் காலம் என்பவற்றில் பொருட்களின் வரிகளை அதிகரிக்க வில்லை.

இந்நிலையில், அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் சுமைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துக்குள் அங்கும் இங்கும் மாற்றம் ஏற்பட்டுப் பிரயோசனம் இல்லை. பெரிய ஒரு தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே எமது நோக்கம் என்றார்.