மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லம் சென்ற சம்பந்தன் - சுமந்திரன்! காத்திருந்த ஏமாற்றம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்- சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதிகாரப் பகிர்வு ஆவணம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் பேசுவார்கள் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், ஜனாதிபதியுடனான குறித்த தனிப்பட்ட சந்திப்பு நேற்று இடம் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த புத்தாண்டு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும், அரசியல் சார்பான பேச்சுக்கள் எவையும் இடம்பெறவில்லை என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.

Latest Offers