மருந்துப் பொருட்களின் விலைகளின் பகுப்பாய்வு இறுதிக்கட்டத்தில்; ராஜித சேனாரத்ன தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கம் இதுவரை 73 மருந்து வகைகளின் விலைகளை ஒழுங்குறுத்தியிருக்கிறது.

புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் 95 சதவீதமான மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. புற்றுநோய் மருந்துகளுக்கான விலை மனுக்கோரலின் போது சமர்ப்பிக்கக் கூடிய உயர்ந்தபட்ச விலை 95 ரூபாவாகும் என்ற சுற்று நிரூபத்தையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேலும் 27 மருந்து வகைகளின் விலைகளும் ஒழுங்குறுத்தப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.