மக்களை மோசமான நிலைக்கு தள்ளிவிடாமல் வரவுசெலவு திட்டத்திற்கு வாக்களித்தோம்! ஞா.சிறிநேசன்

Report Print Kumar in அரசியல்
30Shares

தமிழ் மக்கள் ஐந்து வருட காலத்திற்கு தங்களுக்கு வழங்கிய ஆணையை பாதுகாக்கும் வகையிலேயே ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி மக்களை பாதுகாத்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் - சிங்கள சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் இன்று அம்பிளந்துறை சுதந்திரம் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றள்ளது.

கிராமிய கலை, கலாசார விளையாட்டுக்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்லும் வகையில் இவ்வாறான விளையாட்டு விழாக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுதந்திரம் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் க.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த கலாசார விளையாட்டு விழாவில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள், கிராம முக்கிஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கலாசார விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் இதில் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என பல்வேறு வயதினரும் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர். ஆத்துடன் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

மிகமோசமான நிலைக்கு மக்களை தள்ளிவிடாமல் இந்த வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம். இதன் காரணமாக 50 கோடிக்கும் அதிகமான நிதிகளை அபிவிருத்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கையாளக்கூடிய நிலையேற்பட்டுள்ளது.

அபிவிருத்திகள் ஒரு பக்கமாக இருந்தாலும் அரசியல் தீர்வு என்பதும் எங்களுக்கு மிக முக்கியமான விடயமாகவுள்ளது.

இந்த அரசியல் தீர்வுக்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளை நம்பிக்கையுடன் முன்னெடுத்துவந்தோம் ஆனால் கடந்த காலத்தில் நம்பிக்கையுடன் வாக்களித்த ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு விடயத்தினை ஒரு வகையில் குழப்பியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.