த.தே.கூட்டமைப்பு எதிரணி வரிசையில் அமர்ந்தாலும்... எமக்கு பூரண ஆதரவு

Report Print Rakesh in அரசியல்

2018 ஒக்டோபர் 26 போல் மீண்டும் அரசியல் சூழ்ச்சிக்கு எத்தனிப்பவர்கள் என்னதான் ஆட்டம் போட்டாலும் இறுதியில் மூக்குடைபட்டே போவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எங்கள் அரசு தலை நிமிர்ந்தே நிற்கும், ஒருபோதும் கவிழாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவித்தபோது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய முன்னணி அரசில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல பங்காளி கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் எனது தலைமையில் கீழ் ஒற்றுமையுடன் ஓரணியில் செயற்படுகின்றனர்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணி வரிசையில் அமர்ந்து கொண்டாலும் தமிழ் மக்களின் நலன் கருதி எமது அரசுக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.

இந்த ஒற்றுமை '2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி' நடந்தது முதல் தொடர்கின்றது. இதனால்தான் அந்த அரசியல் சூழ்ச்சியை வெறும் 51 நாட்களில் முறியடித்தோம்.

இனி மேலும் அரசியல் சூழ்ச்சிக்கு இடமளிக்க மாட்டோம். இந்த அரசை எவராலும் கவிழ்க்கவே முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers