ஜனாதிபதி மைத்திரி இந்தியாவிற்கு விஜயம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 7.40 மணிக்கு ஜனாதிபதி ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 177 ரக விமானத்தின் ஊடாக இந்தியாவின் ஹைட்ரபாத் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

திருப்பதியில் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கடி திருப்பதியில் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers