கோத்தபாய இல்லையெனில் இவர் தான் ஜனாதிபதி வேட்பாளர்?

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கிடைக்காது போனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி குமார வெல்கம ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு பிரதான கட்சியின் ஆதரவு வெல்கமவுக்கு கிடைக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்ட வேண்டும் என அந்த கட்சியினர் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.