கோத்தபாய தொடர்பான முக்கிய தகவலை அம்பலப்படுத்தினார் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் விடயத்தில் சட்ட ரீதியான தடையேற்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம், முற்றிலும் பொய்யானது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து தான் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரித்ததாகவும் வழக்கு தொடரப்பட்ட கதையும், அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் இலங்கையில் இருக்கும் பரப்பரப்பு அமெரிக்காவில் இல்லை என கூறியதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

எவராவது தனக்கு அமெரிக்க குடியுரிமை வேண்டாம் என கூறினால், பலவந்தமாக குடியுரிமையை வைத்து கொள்ளும் சட்ட ரீதியான சம்பிரதாயங்கள் அந்த நாட்டில் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.