புதிய அரசாங்கத்தை அமைத்தால் மகிந்தவுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் இணக்கத்துடன் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சியல்ல. அடுத்த அணியில் உள்ளவர்கள் எப்படி வேட்பாளர்களை தெரிவு செய்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி, அவரது மனைவி, சகோதரர்கள், மகன்மார் இணைந்தே வேட்பாளர்களை தெரிவு செய்கின்றனர். இது குடும்பவாதம். ஐக்கிய தேசியக் கட்சி அப்படியல்ல இது மக்களின் கட்சி. கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற குழு கூடி நாங்கள் ஒருவரை தெரிவு செய்வோம்.

தற்போது எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அவர் தேர்தலில் போட்டியிடுவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் கிரியல்ல கூறியுள்ளார்.

அதேவேளை புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராகி வருவதாக வெளியாகும் செய்தகிள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கிரியெல்ல,

அப்படி எதுவும் இல்லை. அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 113 உறுப்பினர்களின் ஆதரவின்றி அரசாங்கம் ஒன்றை அமைத்தால், மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும்.

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்ற செய்தியில் எந்த உண்மையுமில்லை. அது பச்சை பொய். சில ஊடகங்கள் உருவாக்கி செய்தி இது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers