எனக்கு எதிரான வழக்கில் சட்டத்தரணிகள் முன்னிலையாவார்கள்: கோத்தபாய

Report Print Kamel Kamel in அரசியல்

அமெரிக்காவில் தமக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தமது சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு குறித்த கோப்புகள் அமெரிக்க நீதிமன்றில் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம் தொடர்பில் அவரது புதல்வியினால் இந்த வழக்கு அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்காக அமெரிக்காவில் உள்ள தமது சட்டத்தரணிகள் முன்னிலையாவார்கள் என கோத்தபாய ராஜபக்ச இலங்கை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

Latest Offers