ஊழல் மோசடி! துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொன்ற முன்னாள் ஜனாதிபதி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா.

தன்னைத் தானே சுட்டுக்கொண்டதில் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இந் நிலையில் சிகிச்சைக்காக தலைநகர் லீமாவிலுள்ள காசிமிரோ உல்லோவா மருத்துவமனையில் அவருக்கு சத்திரசிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக பிரேசிலியக் கட்டுமான நிறுவனமான Odebrecht இடமிருந்து கையூட்டுப்பெற்றதாக அலன் கார்சியா குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்யச் சென்றுள்ளனர். எனினும் பொலிஸார் அங்கு சென்ற நிலையில் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார் என்றும், அவரை பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers