எந்தச் சதியும் செய்யவில்லை! செய்யவும் மாட்டோம்: மகிந்த வாக்குறுதி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவ்வித சதிகளும் முன்னெடுக்கப்படவில்லை முறையான வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமஹால் விகாரையில் இன்று இடம் பெற்ற சமய நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசாங்கத்தை வீழ்த்தும் அனைத்து அதிகாரமும் எதிர்க்கட்சிக்கு உள்ளது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகள் அனைத்தும் இடம்பெறுவதுடன் இடம்பெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப் பெறும்.

அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவ்வித சதிகளும் முன்னெடுக்கப்படவில்லை முறையான வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பொறுப்பு வாய்ந்த எதிர்க்ட்சி என்ற அடிப்படையில் ஆட்சியினை கைப்பற்றும் அனைத்து விதமான அதிகாரங்களும் எமக்கு காணப்படுகின்றது. விரைவில் நிரந்தரமான ஒரு ஆட்சி உருவாக்கப்படும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. கட்சியின் அனைத்து தரப்பினரது கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டே ஒருமித்த தீர்மானம் எட்டப்படும்.

இன்றைய பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் பொருப்பு கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers