அவசர ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ஐ.தே.கட்சி! பொது வேட்பாளராக களமிறங்கும் கரு ஜயசூரிய?

Report Print Steephen Steephen in அரசியல்

அவசரமான ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்திப்பில் கட்சியின் அமைப்பு பணிகள் தொடர்பான பிரச்சினை குறித்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது பற்றியும் பேசப்படலாம் என கூறப்படுகிறது.

அமைச்சர்கள் சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க இடையில் ஏற்பட்டுள்ள மோதலான நிலைமை குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நிறுத்தினால், அதற்கு சகல தரப்பினரையும் இணைத்துக்கொள்ள உகந்த தொனிப்பொருளை பயன்படுத்த சிவில் அமைப்புகள் தீர்மானத்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியை இணைத்துக் கொள்வதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனையை உள்ளடக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால் நாடு ஸ்திரமற்ற நிலைமைக்கு செல்லும் எனக் கூறும் ஜாதிக ஹெல உறுமய கட்சியை சமாளிக்க, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த 6 முதல் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கவும் அனைத்து அதிகாரங்களையும் இரத்துச் செய்யாது மாகாண சபைகளை கலைப்பது உள்ளிட்ட அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கும் யோசனையையும் சிவில் அமைப்புகள் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரு ஜயசூரிய பொது வேட்பாளராக போட்டியிட அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பொது வேட்பாளர் பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers