அடுத்து வரும் சில தினங்களில் இருவருக்கு தூக்குத் தண்டனை! ஜனாதிபதி உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புலப்படாத ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை புனைந்து காட்டி மக்களை தவறாக வழி நடத்தி நாட்டை தற்போது வேறு திசை நோக்கி கொண்டு செல்கின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை எதிர்க்கட்சியினருக்கு உள்ளது.

பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் எதிர்காலத்திலும் இடதுசாரி தலைவர் ஒருவருக்கே வழங்கப்படும்.எப்போதும் அதனை ஐக்கிய தேசியக் கட்சியிடம் வழங்கும் எதிர்பார்ப்பு இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளர் என்றே இறுதி முடிவு வரும்.அடுத்த சில தினங்களில் போதைப் பொருளுடன் சம்பந்தப்படட சிலருக்கு ஜனாதிபதி மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாகவும் இசுரு தேவப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers