ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்கு? சரத் பொன்சேகா

Report Print Sujitha Sri in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச அல்லது மஹிந்த ராஜபக்ச ஆகியோரில் யார் களமிறங்கினாலும் நாம் அதனை கண்டு அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று இன்றைய தினம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் சரத் பொன்சேகா மேலும்,

ஜனாதிபதி தேர்தலுக்கு மஹிந்த தரப்பு தயார் எனில் அவர்கள் அதனை அறிவிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு பக்கமும், பொதுஜன பெரமுனவாக ஒரு அணியினர் மறு பக்கமும் உள்ளனர்.

இவர்களுக்குள் ஒற்றுமை அல்லை. ஆகவே இவர்களால் ஒரு தலைவரை தெரிவு செய்ய முடியாது என கூறியுள்ளார்.

அத்துடன் தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers