தனது எண்ணத்தை சஜித் முன்னிலையில் போட்டுடைத்தார் சங்கக்கார

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறங்குவது குறித்த தனது எண்ணத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார போட்டுடைத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கும் எனவும், ஆனால் தனக்கு அப்படியான எண்ணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குமார் சங்கக்காரவின் பெயரில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த வியடத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், கட்சி என்றால் அதற்குள் முரண்பாடுகள் வருவது வழமை. அதேவேளை, அரசியல்வாதிகளும் கால சூழ்நிலைகளுக்கேற்ப கருத்துக்களை வெளியிடுவதும் வழமை.

நான் சாதாரண பிரஜை. அரசியலில் களம் இறங்கும் எண்ணமோ அல்லது அரசியல்வாதிகளை விமர்சிக்கும் தகுதியோ என்னிடம் இல்லை. எனினும், ஒவ்வொரு செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளும் தற்போது எழுந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கும்.

ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.