முடிந்தால் அமெரிக்காவிற்குள் வந்து காட்டுங்கள்! கோத்தபாயவை மிரட்டும் பெண் முக்கியஸ்தர்

Report Print Vethu Vethu in அரசியல்

முடிந்தால் அமெரிக்காவுக்குள் வந்து காட்டுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பெண்ணொருவர் சவால் விடுத்துள்ளார்.

இந்த பகிரங்க சவாலை ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சுகா விடுத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைந்தால் அவரை கண்காணிக்கு குழுவொன்று செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முடிந்தால் இன்னுமொரு முறை அமெரிக்காவுக்கு வருமாறு தான் அவரிடம் தெரிவித்து கொள்கிறேன் என யஸ்மின் சுகா குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவின் திமிர் தனம் காரணமாகவே அமெரிக்காவில் வழக்கில் சிக்கினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் ரோய் சமாதானத்துடன் இணைந்து யஸ்மின் சுகா வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers