மைத்திரியே தகுதியானவர்: இசுறு தேவப்பிரிய

Report Print Malar in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதை மக்களே தீர்மானிக்கும் நிலை உருவாகுமென மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ஹங்வெல்ல பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,

மக்களை திசை திருப்பி மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்வதற்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பேசுகின்றனர்.

ஜனாதிபதி பதவியை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படாது.

என்ன பெயர்களைக் கூறினாலும் இறுதியில் மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராவார். இதற்கு அப்பால் வேறு அரசியலுக்கான இடம் கிடையாது.

அவரால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அவர் பிரபலமான ஒருவராக இருக்கின்றார்.

போதைப்பொருள் தொடர்பாக அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை. எப்படியும் எதிர்வரும் நாட்களில் ஒருவர், இருவர் தூக்கிலிடப்படலாம்.

அப்போது மக்கள் யார் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டுமென்பதை தீர்மானிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers