மேல் மற்றும் தென் மாகாண ஆளுநர் பதவிகளில் மாற்றம்?

Report Print Steephen Steephen in அரசியல்

மேல் மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய தென் மாகாணசபை கலைந்த பின்னர், அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா ஆளுநராகவும் மேல் மாகாணசபை கலைந்த பின், அந்த முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆளுநராகவும் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் தேசிய தேர்தல்களை இலக்காக கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் மேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அசாத் சாலி மற்றும் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால், ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படாது என ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.