புதிய வாக்காளர்கள் 2 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த தேர்தலில் வாக்களிக்க இரண்டு இலட்சம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் அட்டைகளே பயன்படுத்தப்படும் 2 இலட்சம் பேர் புதிதாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

இதற்கு அமைய வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியே 59 இலட்சமாக அதிகரித்துள்ளது. 1980 இலக்கம் 44 என்ற சட்டத்திற்கு அமைய வருடந்தோறும் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 வயதை பூர்த்தி செய்த அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில், 2019 ஜூன் முதலாம் திகதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள், இம்முறை தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Latest Offers