தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் தெரிவு

Report Print Gokulan Gokulan in அரசியல்

தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த கி.சேயோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடத்த இளைஞர் அணி நிர்வாக தெரிவில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

செயலாளராக பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் தெரிவாகியுள்ளார்.

இம்முறை இணை பொருளாளர்களாக இருவர் தெரிவாகியுள்ளனர்.

மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனிற்கு இம்முறை இளைஞர் அணியில் முக்கிய பொறுப்புக்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பையடுத்து, அவர் எந்த பொறுப்பிலும், நியமிக்கப்படவில்லை.

தமிழரசு கட்சியின் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரத்தினசிங்கம், ஈ.சரவணபவன் மற்றும் கட்சியின் பொது செயலாளர் துரைராஜாசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இளைஞர் அணி மாநாடு நடைபெற்று வருகின்றது.

Latest Offers