மைத்திரி மகிந்த இடையில் இரகசிய சந்திப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இடையில் மிக முக்கியமான சந்திப்பொன்று அடுத்த சில தினங்களில் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த சந்திப்பில் இருத்தரப்பையும் சேர்ந்த எவரையும் இணைத்துக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அண்மையில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள இரண்டு பேருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த சந்திப்புக்கான இணக்கத்திற்கு வந்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து வேட்பாளரை நிறுத்தும் விடயம் சம்பந்தமாக இதன் போது கருத்துக்கள் பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து மைத்திரி மற்றும் மகிந்த தமது கட்சியினருக்கு அறிவிப்பார்கள் என தெரியவருகிறது.

Latest Offers